புற்றுநோயால் மார்பகத்தை இழந்த பிரபல நடிகரின் மனைவி

புற்றுநோயால் தனது வலது மார்பகத்தை அகற்றியுள்ளார் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி தஹிரா.
புற்றுநோயால் நடிகர், நடிகைகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்தே என சினிமா பிரபலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.

இந்நிலையில் எழுத்தாளர், இயக்குநர் என பன்முகத்திறமை கொண்ட தஹிரா கைஷப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது அவருக்கு சமீபத்தில் தெரிய வந்தது. இவர் நடிகர் ஆயுஷ்மான் குரானாவின் மனைவி ஆவார். நார்மல் செக்கப்பிற்காக சென்ற இவருக்கு மார்பக புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது. இதனால் புற்றுநோய்க்கான சிகிச்சையை மேற்கொண்டு வந்தார். புற்றுநோயால் அறுவைசிகிச்சை செய்து தனது வலதுபக்க மார்பை நீக்கிக் கொண்டார். நேற்று உலகப் புற்றுநோய் தினத்தை முன்னிட்டு தஹிரா தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த தழும்பை என் தன்னம்பிக்கைக்குக் கிடைத்த விருதாகவே நினைக்கிறேன். என் தன்னம்பிக்கை எல்லாவற்றையும் தாங்கும் வல்லமை


படைத்தது என்று காட்டவே இந்த போட்டோவை பதிவிட்டேன் என அவர் கூறினார். இந்த பதிவை பார்த்த பலர் தஹிராவின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.