ஏற்கனவே சுத்தம்: இதுல இதுவேறையா; தேவ் பரிதாபங்கள்!!

ஏற்கனவே தேவ் திரைப்படத்திற்கு சுமாரான விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது பட தமிழ்ராக்கர்ஸில் வெளியாகியிருப்பது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அறிமுக இயக்குநரான ரஜத் ரவிசங்கர் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக நடத்துள்ள படம் தேவ். பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், வம்சி கிருஷ்ணா, ரேணுகா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் உள்ளிட்டோர் முக்கியக் வேடத்தில் நடித்துள்ளனர். காதலர் தினம் பிப்ரவரி 14-ம் தேதியான நேற்று இப்படம் வெளியானது.

இப்படத்திற்கு பெரும்பாலான இடங்களில் ரொம்ப சுமாரான ரெஸ்பான்ஸ் தான், சிலர் படம் படுமோசம் எனவும் கூறுகின்றனர்.

இந்நிலையில் வழக்கம்போல் தமிழ்ராக்கர்ஸ் தேவ் படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே படத்திற்கு நெகட்டிவ் ரெஸ்பான்ஸ் வந்திருப்பதால் வருத்தத்தில் இருந்த கார்த்திக்கிற்கும் படக்குழுவினருக்கும் இச்சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.