‘எனை நோக்கி பாயும் தோட்டா’ தணிக்கை தகவல்

தனுஷ் நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கி வந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படம் கடந்த 2016ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது. இந்த படத்திற்கு பின் தொடங்கப்பட்ட ‘வடசென்னை’, ‘மாரி 2’ ஆகிய படங்கள் ரிலீசாகிவிட்ட போதிலும் இந்த படம் காலதாமதம் ஆகிக்கொண்டே இருந்தது
இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தணிக்கைக்கு சென்றது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இன்று இந்த படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகள் படத்திற்கு UA சான்றிதழ் அளித்துள்ளனர். தணிக்கை சான்றிதழ் கிடைத்துவிட்டதை அடுத்து இந்த படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிக்கப்படும் என்றும் அனேகமாக
இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், மேகா ஆகாஷ், சுனைனா, சசிகுமார், ராணா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இவரது இசையில் உருவான ‘மறுவார்த்தை’ உள்பட அனைத்து பாடல்களும் ஏற்கனவே ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.