அடப்பாவிங்களா! கடைசில டிவி சீரியலில் கூட லிப்லாக் சீன் வச்சுடீங்களேடா!

பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டும் தான் லிப் லாக் முத்தக்காட்சி, கவர்ச்சியான சீன்கள் இடம்பெறும். குழந்தைகளை அருகில் வைத்துக்கொண்டு அந்த படங்களை பார்க்கும் போது சட்டென ஓடி போய் ரிமோட்டை தேடுவார்கள் பெற்றோர்கள். பிறகு பாலிவுட் சினிமாக்களில் ஆரம்பித்து மெல்ல மெல்ல தமிழ் சினிமாக்களிலும் அந்த சாயல் தொற்றிக்கொண்டது. ஆனால், தற்போது சீரியல்களிலும் சினிமாவிற்கு நிகரான காட்சிகளை புகுத்த துவங்கியுள்ளனர். இல்லத்தரசிகள் மத்தியில் சினிமாவைவிட அதிகம் கவர்த்திழுப்பது சீரியல் தொடர்கள் தான், இதனால் பல்வேறு தொலைக்காட்சிகளும் இல்லத்தரசிகளை கவரும் விதத்தில் வித்யாசமான கதையம்சம் கொண்ட தொடர்களை போட்டி போட்டுக்கொண்டு இயக்கப்படுகின்றன.

அந்த வகையில்பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் திருமணம் சீரியலில் லிப் லாக் காட்சி இடப்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரைப்படங்களில் மட்டுமே இதுபோன்ற காட்சிகள் இடம்பெற்ற நிலையில் தற்போது சீரியலில் இதுபோன்ற காட்சிகள் வருவதை கண்டு ரசிகர்கள் அதிர்ச்சியில் அடைந்துள்ளனர்.