கனா ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியானது

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள கனா படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள் யூடியூப்பில் வெளியாகி உள்ளது. பெண்கள கிரிக்கெட்டை மையப்படுத்தும் இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ், கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ள படம் கனா. இந்த படத்தில் ஐஸ்வர்யாவுக்கு சத்யராஜ் தந்தையாக நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் நண்பரும், பிரபல சினிமா பாடலசிரியருமான அருண் ராஜா காமராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். கனா படத்துடன் போட்டிபோடும், சீதக்காதி, அடங்கமறு படங்களின் ஸ்னீக் பீக் காட்சிகள் வெளியான நிலையில், இப்போது கனா படத்தில் இருந்தும் வெளியாகி உள்ளது.