பிரபல நடிகர்-இயக்குனருக்கு ஜோடியாகும் நிக்கி கல்ராணி

கடந்த ஆண்டு நடிகர் சசிகுமாருக்கு சோதனையான ஆண்டாக இருந்தாலும் இந்த ஆண்டு ஆரம்பத்திலேயே அவர் ரஜினியுடன் நடித்த ‘பேட்ட’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது ‘நாடோடிகள் 2’ உள்பட மூன்று படங்களில் நடித்து வருகிறார்

தற்போது சசிகுமாரின் 19வது படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது. சசிகுமாரின் 19வது படத்தை கதிர் என்ற அறிமுக இயக்குனர் இயக்கவுள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சியின் உதவியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் கோலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான நிக்கி கல்ராணி சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். சசிகுமார், நிக்கி கல்ராணி இணைந்து நடிப்பது இதுவே முதல்முறை ஆகும் இந்த படத்தை . செந்தூர் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையமைக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவும், சாபு ஜோசப், ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.