திருமணத்தில் நடனமாடுறேன்னு சொல்லி விஜய் பட நாயகி செய்த வேலையை பாருங்க!

திருமணத்தில் நடனம் ஆடுவதாகக் கூறி 11 லட்சம் மோசடி செய்த நடிகை அமீஷா பட்டேல் மீது வழக்குத் போடப்பட்டுள்ளது.! கடந்த 2003ம் ஆண்டில் விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருந்தவர் அமீஷா பட்டேல். ஆனால் தொடர்ந்து பட வாய்ப்புகள் அமையாததால், மேடை நிகழ்ச்சிகளில் நடனம் ஆடவேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். சினிமா வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் நிகழ்ச்சிகளில் அவர் ஆடும் கவர்ச்சி நடனத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2016ம் ஆண்டு, திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடனம் ஆடுவதாக கூறி ரூ. 11 லட்சம் சம்பளம் பணத்தை பெற்றுக்கொண்ட அமீஷா சொன்னபடி திருமண நிகழ்ச்சியில் நடனம் ஆட வரவில்லை எனக் கூறி அவரை ஒப்பந்தம் செய்த நிறுவனம் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் அவருடன் மேலும் 4 பேர் சிக்கியுள்ளனர்.

இது தொடர்பாக பவன் சர்மா அளித்துள்ள புகாரில், திருமண நிகழ்ச்சியில் நடனமாடுவதற்காக அமீஷாவை ரூ.11 லட்சம் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தோம் , ஆனால் அவர் நிகழ்ச்சி தொடங்கும் முன் கூடுதலாக 2 லட்சம் பணம் கேட்டார் அதனை நாங்கள் கொடுக்க மறுத்ததால் அமீஷா நடனமாடவில்லை. பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதற்கு அமீஷா தரப்பில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்தது என சர்மா அந்த புகாரில் கூறியுள்ளார்.

பவன் சர்மா புகாரின் பேரில் அமீஷா மீது மோசடி வழக்கு பதிவு செய்துள்ள மும்பை போலீசார் அமீஷா உள்ளிட்ட 5 பேரை மார்ச் 12 தேதி மும்பை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.