அடுத்தடுத்த வாரத்தில் ரிலீஸ் ஆகும் சமுத்திரக்கனியின் 2 படங்கள்

கோலிவுட் திரையுலகில் நடிகர், இயக்குனர் என இரண்டு அவதாரங்களில் ஒரே நேரத்தில் ஜொலித்து வருபவர்களில் ஒருவர் சமுத்திரக்கனி. இந்த நிலையில் இவர் இயக்கிய படம் ஒன்றும், இவர் நடித்த படம் ஒன்றும் அடுத்தடுத்த வாரங்களில் வெளியாகவுள்ளது.

சமுத்திரக்கனி நடிப்பில் இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் மரியா மனோகர் இசையில் உருவாகியுள்ள படமான ‘பெட்டிக்கடை’. சூப்பர் மார்க்கெட் மற்றும் ஆன்லைன் வர்த்தகம் ஆரம்பித்த பின்னர் பெட்டிக்கடைகளின் நிலை என்ன ஆனது? என்ற கதையம்சம் கொண்ட இந்த படம் பிப்ரவரி 22ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே தேதியில் உதயநிதியின் ‘கண்ணே கலைமானே’, ஆர்.ஜே.பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ மற்றும் ஓவியாவின் ’90ml’ ஆகிய படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமுத்திரக்கனியின் ‘பெட்டிக்கடை’ படமும் இதில் இணைந்துள்ளத அதேபோல் வரும் மார்ச் 1ஆம் தேதி சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார், அஞ்சலி நடித்த ‘நாடோடிகள் 2’ திரைப்படம் வெளியாகவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.