அஜித் படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்…?

நடிகர் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து எச். வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள பிங்க் படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா ட்ரையாங், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும், யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இந்த படத்தில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதாவது அஜித் படத்தின் மூலம் அவர் தமிழில் அறிமுகமாகிறார் என கூறப்பட்டது.

இந்த செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார் ஜான்வி. அவர் கூறியதாவது, அஜித் படத்தில் நான் நடிக்கிறேன். தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறேன் என வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி என தெரிவித்துள்ளார்.